நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு சலார் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதேசமயம் பிரபாஸ் கல்கி 2898AD படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸ் தவிர கமல்ஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் எதற்கு இசையமைத்துள்ளார். டைம் ட்ராவல் சம்பந்தமான கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இப்படம் 2024 ஜூன் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் இதனை எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. அதன்படி படம் சம்பந்தமாக வெளியாக ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே படத்தின் முன்னோட்டமும், அமிதாப் பச்சனின் முன்னோட்டமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் துல்கர் சல்மான் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் புஜ்ஜி என்ற கதாபாத்திரம் பிரபாஸின் நண்பனாக படம் முழுக்க பயணிக்கிறதாம். இது திறமையான டெக்னீசியன்களை கொண்டு கைகளால் செய்யப்பட்டதாம். இது எப்படி உருவாக்கப்பட்டது இதன் வடிவமைப்பு என்ன என்பது சம்பந்தமான மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த புஜ்ஜி கதாபாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது.