Homeசெய்திகள்சினிமாரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு தளத்தில் ராதிகா - கீர்த்தி சுரேஷ்... புகைப்படங்கள் வைரல்...

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு தளத்தில் ராதிகா – கீர்த்தி சுரேஷ்… புகைப்படங்கள் வைரல்…

-

தென்னிந்தியாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். 2022-ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக் காயிதம், சர்காரு வாரி பட்டா, வாஷி உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இதில் சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தியின் நடிப்பு பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, தெலுங்கில் நானியுடன் தசரா படத்தில் நடித்திருந்தார். தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் மாமன்னன். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து கீர்த்தி நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் சுமார் 4 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ரகு தாத்தா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் அட்லீ தயாரிக்கிறார். வருண் தவான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், தமிழில் கன்னிவெடி படத்தில் நடிக்கிறார். மற்றொரு திரைப்படம் ரிவால்வர் ரீட்டா. இயக்குநர் சந்துரு இப்படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. தினேஷ் கிருஷ்ணன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா சரத்குமார் உள்பட பலர் உள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

MUST READ