தன்னுடைய காதல் விஷயம் ஏற்கனவே விஜய்க்கு தெரியும் என கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இவர் பாலிவுட்டிலும் அறிமுகமாகி பேபி ஜான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தமிழில் கண்ணி வெடி, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அதே சமயம் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கீர்த்தி சுரேஷுக்கு அவருடைய 15 வருட காதலன் ஆண்டனி தட்டிலுடன் கோவாவில் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமண விழாவில் விஜய், திரிஷா, சூரி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், சினிமாவில் சிலருக்கு தன்னுடைய காதல் விஷயம் குறித்து ஏற்கனவே தெரியும் என்று கூறியுள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது, “நானும் ஆன்டனியும் காதலிப்பதை மறைமுகமாக வைத்திருக்க நினைத்தேன். அதன்படி என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் சினிமாவில் உள்ள சிலரை தவிர யாருக்கும் தெரியாது. விஜய், அட்லீ, சமந்தா, கல்யாணி பிரியதர்ஷன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜெகதீஷ் போன்ற சிலருக்கு நானும் ஆண்டனியும் காதலிப்பது ஏற்கனவே தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -