Homeசெய்திகள்சினிமாகீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'ரகு தாத்தா'.... ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரகு தாத்தா’…. ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'ரகு தாத்தா'.... ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். மேலும் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். அடுத்தது இவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா எனும் திரைப்படம் வெளியானது.கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'ரகு தாத்தா'.... ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!இந்த படத்தினை சுமன் குமார் இயக்கியிருந்த நிலையில் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தவிர எம்.எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காமெடி கலந்த கதை களத்தில் உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படமானது வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி ஜீ 5 யில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ