நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் விஜயுடன் இணைந்து திரைப்படத்திலும் தனுஷுடன் இணைந்து தொடரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ரகு தாத்தா. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி , ராஜிவ் ரவீந்திரநாதன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஃபேமிலி மேன் என்ற வெப் தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். யாமினி யாக்னமூர்த்தி படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசரும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகின்றன.
Unveiling the #RaghuThathaTrailer Today at 1:58 PM.
This special timing marks the start of something auspicious. #RaghuThatha worldwide grand release on August 15th!@KeerthyOfficial @hombalefilms @vkiragandur @sumank @vjsub @yaminiyag @RSeanRoldan @rhea_kongara @editorsuresh… pic.twitter.com/Qg71gHiZF4— Hombale Films (@hombalefilms) July 31, 2024
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது படத்தின் பின்னணி வேலைகளும் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்க படமானது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மதியம் 1.58 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.