Homeசெய்திகள்சினிமாகீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா... வெளியானது புதிய வீடியோ...

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா… வெளியானது புதிய வீடியோ…

-

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படத்திலிருந்து புதிய புரோமோ காணொலி வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

யாஷ் நடிப்பில் கேஜிஎஃப், ரிஷப் ஷெட்டி நடிப்பில் காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முதலாக தயாரிக்கும் திரைப்படம் ரகு தாத்தா. பெரும் வரவேற்பை பெற்ற தி ஃபேமிலி மேன் வெப் தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார் எழுதி இயக்கியிருக்கிறார். இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷணினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஒய் யாமினி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்சன் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

கதாநாயகியை மைப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நடப்பு ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே மாதம் மொத்த படப்பிடிப்பும் நிறைவு அடைந்தது. இதையடுத்து, பின்னணி வேலைகள் மட்டும் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ரகு தாத்தா படத்திலிருந்து புதிய புரோமா வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக இப்படம் உருவாகி இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷும் பதிவிட்டுள்ளார். விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்புடன் படக்குழு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. இது டிரெண்டாகி வருகிறது.

MUST READ