தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடைசியாக ரகு தாத்தா எனும் திரைப்படம் வெளியானது. அடுத்தது வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி பேபி ஜான் எனும் திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் தனது நண்பர் ஆண்டனி தட்டிலை கடந்த 15 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரின் திருமணம் நேற்று (டிசம்பர் 12) கோவாவில் வைத்து நடைபெற்றுள்ளது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்த இந்த திருமண விழாவில் விஜய், திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். மேலும் ரசிகர்களும் கீர்த்தி சுரேஷுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமண விழாவில் கேரள முறைப்படி விருந்து பரிமாறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சாம்பார் சாதம், தேங்காய் சாதம், லெமன் சாதம், புளி சாதம், கூட்டு, பொரியல், அப்பளம், ஊறுகாய், நேந்திரம் சிப்ஸ், கத்தரிக்காய், பாயாசம், ஸ்வீட், வாழைப்பழம் ஆகியவை பரிமாறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இது தொடர்பான புகைப்படத்தை நடிகை திரிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.