Homeசெய்திகள்சினிமாசைரன் படத்திற்கு வரவேற்பு... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்...

சைரன் படத்திற்கு வரவேற்பு… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்…

-

- Advertisement -
திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் சைரன் படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருவதையொட்டி, படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு நன்றிதெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம்ரவி. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வனாக அப்படங்கவில் ஜெயம்ரவி அசத்தியிருப்பார். திரைப்பயணம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே முன்னணி இளம் நாயகனாக உருவெடுத்த ஜெயம்ரவி, அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். ஜெயரம் ரவி நடிப்பில் வெளியான அகிலன், இறைவன் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றன.

இதையடுத்து, ஜெயம்ரவி நடிப்பில் உருவான திரைப்படம் சைரன். ஆண்டனி பாக்யராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் ஜெயம்ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வெளியான நாள் முதலே சைரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பட வசூலிலும் முன்னேறி வருகிறது. இந்த நிலையில், படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் ஏற்று நடித்த நந்தினி கதாபாத்திரத்திற்கு அளித்த வரவேற்புக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

MUST READ