Homeசெய்திகள்சினிமாகீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு

-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த ரிவால்வர் ரீட்டா படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். 2022-ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக் காயிதம், சர்காரு வாரி பட்டா, வாஷி உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இதைத் தொடர்ந்து, தெலுங்கில் நானியுடன் தசரா படத்தில் நடித்திருந்தார். தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் மாமன்னன். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து கீர்த்தி நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் சுமார் 4 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ரகு தாத்தா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் அட்லீ தயாரிக்கிறார். வருண் தவான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், தமிழில் கன்னிவெடி படத்தில் நடிக்கிறார்.

மற்றொரு திரைப்படம் ரிவால்வர் ரீட்டா. இயக்குநர் சந்துரு இப்படத்தை இயக்குகிறார்.பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. தினேஷ் கிருஷ்ணன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.படத்தில் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

MUST READ