Homeசெய்திகள்சினிமா"கேரளா ஸ்டோரி படம் மதத்திற்கு எதிரானது அல்ல"... நடிகை சித்தி இத்னானி விளக்கம்!

“கேரளா ஸ்டோரி படம் மதத்திற்கு எதிரானது அல்ல”… நடிகை சித்தி இத்னானி விளக்கம்!

-

மதத்திற்கு எதிரானது அல்ல தீவிரவாதத்திற்கு எதிரானதே தி கேரளா ஸ்டோரி என்று நடிகை சித்தி இத்னானி தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது மலையாளத்தில் வெளியாகியுள்ள கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம். அந்தப் படத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாத பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றம் செய்யப்பட்டு ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு தீவிரவாத செயல்களுக்கு அனுப்பப்படுவதாக  கதைகளம் அமைக்கப்பட்டது. அதையடுத்து பெரும் எதிர்ப்பு கிளம்பவே அது 3 பெண்கள் என்று மாற்றப்பட்டது.

இந்த படத்தில் கூறப்படுவதை உண்மை என நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் சன்மானம் தருவதாக முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட வேண்டாம் என்று உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் படம் தமிழகத்தில் வெளியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகும் திரையரங்குகளில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சித்தி இத்னானி படம் குறித்து தற்போது பதிவு வெளியிட்டுள்ளார்.

“கீதாஞ்சலி மேனன். தி கேரளா ஸ்டோரி. இந்தப் படம், வெறுப்பை உருவாக்க அல்ல.. விழிப்புணர்வு உருவாக்கவே. இந்தப் படம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல தீவிரவாதத்திற்கு எதிரானது. ஒரு நடிகராக, நான் நியாயம் செய்தேன் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

MUST READ