ஜெயிலர் 2 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், ஆகியோர் கேமியோ ரோல்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து நெல்சன், ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் தமன்னா, விநாயகன் ஆகியோரை தவிர முதல் பாகத்தில் நடித்த மற்ற அனைவரும் நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கே ஜி எஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க உள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. மேலும் ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் விரைவில் ப்ரோமோ உடன் ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.