Homeசெய்திகள்சினிமா'அமரன்' படம் பார்த்துவிட்டு குஷ்பூ எனக்கு போன் பண்ணி.....விழா மேடையில் சிவகார்த்திகேயன்!

‘அமரன்’ படம் பார்த்துவிட்டு குஷ்பூ எனக்கு போன் பண்ணி…..விழா மேடையில் சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.'அமரன்' படம் பார்த்துவிட்டு குஷ்பூ எனக்கு போன் பண்ணி.....விழா மேடையில் சிவகார்த்திகேயன்! இவரது நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று அமரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தை கமல்ஹாசன் இன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக நடிக்க அவருக்கு இணையாக சாய் பல்லவி, இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றார். இருவருமே தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தனர். 'அமரன்' படம் பார்த்துவிட்டு குஷ்பூ எனக்கு போன் பண்ணி.....விழா மேடையில் சிவகார்த்திகேயன்!இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 14) இந்த படத்தின் 100வது நாள் வெற்றி விழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பு குறித்து பேசி இருந்தார். அதன்படி அவர் பேசியதாவது, “எந்த காட்சிகளிலும் நான் நன்றாக நடிக்கிறேனா? அல்லது சாய்பல்லவி நன்றாக நடிக்கிறாரா? என்று நான் பார்த்ததில்லை. ஏனென்றால் சாய் பல்லவி, நீங்கள் ஸ்டோர் பண்ணினால் நீங்கள் என் ஹீரோயின் ஸ்கோர் பண்றாங்க என்று பெருமைப்படுவேன்.

அமரன் படத்தை பார்த்த பின்னர் குஷ்பூ மேடம் எனக்கு போன் பண்ணி, உங்களுடைய உச்சகட்ட ஹீரோயிசம் எது தெரியுமா? என்று இதைதான் சொன்னார்கள். அதன் பிறகு படத்தில் நீங்கள் இல்லாமல் அந்த கதையை ஹீரோயின் நகர்த்தி செல்வதற்கு நீங்கள் அனுமதித்தீர்கள் என்று சொன்னாங்க. மேடம் நான் அனுமதிக்கவில்லை. அவங்க என்னுடைய ஹீரோயின். முதல் காட்சியில் இருந்து இறுதி வரைக்கும் ஹீரோயின்கள் வலுவாக காட்டப்படுவதை அனுமதிக்கும் ஹீரோக்களும் இங்கு இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் இந்த பேச்சை கேட்ட அங்கு இருந்த அனைவரும் ஆரவாரம் எழுப்பி கைதட்டினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ