மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் திரிஷா கண்டித்து பதிவிட்ட நிலையில் உடனடியாக திரிஷாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டவர் நடிகை குஷ்பு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. மேலும் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குஷ்பூ தற்போது பாரதிய ஜனதா கட்சியில் பங்காற்றி வருகிறார். இந்நிலையில் குஷ்பு திமுக தொண்டர்களை விமர்சிப்பது போன்ற கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். குஷ்பு அப்பதிவில் கூறியிருப்பதாவது “திமுக குண்டர்கள் இது போன்ற மோசமான மொழியை தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு இதுதான் கற்பிக்கப்பட்டுள்ளது. சாரி உங்களை போல் என்னால் சேரி மொழியில் பேச முடியாது. ஆனால் என்ன பேசினார்கள் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரியுங்கள். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்பிக்கவில்லை எனில் நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது” என்று பதிவிட்டுள்ளார்.
குஷ்பு திமுக தொண்டர்களை விமர்சித்து பேசிய இந்த பதிவில் “சேரி மொழி” என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இது தீண்டாமையை ஊக்குவிப்பது, மேலும் ஒரு குறிப்பிட்ட மக்களை இழிவு படுத்துவது போன்ற செயலாக உள்ளது என்று கூறி பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பெண்களை இழிவுபடுத்தும் மோசமான வார்த்தைகளைக் கொண்டது சேரி மொழி என்பது போன்ற ஒரு கருத்தை பிரதிபலிக்கிறது குஷ்புவின் பதிவு. இத்தகைய பதிவிற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -