தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். அதன் பிறகு சேகர் கம்முலா இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்கிடையில் ஹாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராயுடன் ராஞ்சனா, அட்ரங்கி ரே உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதன்படிஅந்த படத்திற்கு தேரே இஷ்க் மெயின் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், கலர் எல்லோ ப்ரோடுக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமான் இசையில் படம் உருவாக இருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலும் இந்த படம் விமானப்படை கதைகளத்தில் காதல் கதையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஹை பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவக்கத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.