Homeசெய்திகள்சினிமாவசூலை வாரி குவித்த வார்... இரண்டாம் பாகத்தின் கதாநாயகி குறித்த அப்டேட்!

வசூலை வாரி குவித்த வார்… இரண்டாம் பாகத்தின் கதாநாயகி குறித்த அப்டேட்!

-

- Advertisement -

ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் வார் 2 படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கிய வார் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன், வாணி கபூர், அசுதோஸ் ராணா, டைகர் ஷராப் மற்றும் பலர் நடித்திருந்தனர். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் ரூ. 475 கோடி வரை வசூல் செய்து வெற்றி பெற்றது.

இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு வார் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் அயன் முகர்ஜி இயக்குகிறார். இப்படத்தையும் யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. வார் 2 படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் கோலிவுட் நடிகர் ஜூனியர் என் டி ஆரும் இணைந்து நடிக்கின்றனர்.

மேலும் இதன் கூடுதல் தகவலாக, இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி நடிகை கியாரா அத்வானி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் எனவும் மற்றொரு கதாநாயகி குறித்து முடிவு செய்யப்படவில்லை எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

MUST READ