Homeசெய்திகள்சினிமாநான்கு மொழிகளில் வெளியானது ‘கூச முனுசாமி வீரப்பன்’

நான்கு மொழிகளில் வெளியானது ‘கூச முனுசாமி வீரப்பன்’

-

பிரபாவதி ஆர்.வி., வசந்த் பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திர ஹாஷ்மி ஆகியோர் தயாரிப்பில் ஷரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆவணத் தொடர் கூச முனுசாமி வீரப்பன். இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். சதீஷ் ரகுநாதன் இந்த தொடருக்கு இசை அமைத்துள்ளார். இந்த தொடர் வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், அவர் பேசும் ஒருஜினல் காணொலி ஒன்று இந்த தொடரில் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. இத்தொடரின் இரண்டு முன்னோட்டங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மேலும் பத்திரிகையாளர்கள் காட்சி கடந்த டிசம்பர் 11-ம் ஆம் தேதி திரையிடப்பட்டது. தொடரை பார்த்த பலரும் நேர்மறை விமர்சனங்களை வழங்கினர். இதனிடையே ரஜினிகாந்த் குறித்து வீரப்பன் பேசும் ப்ரோமோ வீடியோ ரஜினிகாந்த் பிறந்தநாளான கடந்த 12ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. அதை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து டிரெண்டாக்கினர்.

 

இந்த நிலையில், கூச முனுசாமி வீரப்பன் தொடர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் இன்று ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மொத்தம் 6 எபிசோடுகளை கொண்ட இத்தொடரில், நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், வழக்கிறஞர் ப.பா.மோகன், நிருபர் சுப்ரமணியன், நடிகை ரோகிணி, வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோரும் வீரப்பனை பற்றிய அனுபங்களை அவர்களது கருத்தையும் பகிர்ந்துள்ளனர்.

MUST READ