Homeசெய்திகள்சினிமா'கொட்டுக்காளி' படத்தின் திரைவிமர்சனம்!

‘கொட்டுக்காளி’ படத்தின் திரைவிமர்சனம்!

-

கொட்டுக்காளி படத்தின் திரைவிமர்சனம்Kottukkaali movie review!

விடுதலை, கருடன் ஆகிய படங்களுக்கு பிறகு சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கொட்டுக்காளி. இந்த படம் இன்று (ஆகஸ்ட் 23) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ் இந்த படத்தை இயக்க சிவகார்த்திகேயன் படத்தை தயாரித்திருக்கிறார். படத்தில் நடிகர் சூரி பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கூழாங்கல் படத்தைப் போல கொட்டுக்காளி படமும் ஒரு பயணத்தின் கதையாக உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிடையாது. Kottukkaali movie review!இதில் பெண்களின் அடக்குமுறை, சமத்துவமின்மை, மூடநம்பிக்கை என அனைத்தும் காட்டப்பட்டுள்ளது. அதாவது மீனா என்பவள் (அன்னா பென்) கீழ் சாதி யானை காதலிக்கிறாள். அவளின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை காட்டுகிறது. படத்தில் இருக்கும் சேவலும் அன்னா பென்னும் தொடர்பு படுத்தப்படுகின்றனர். அதாவது கால்கள் கட்டப்பட்ட சேவல் எப்படி தப்பிக்க முயற்சிக்கிறதோ அதேபோல் ஆணாதிக்கத்திலிருந்து அன்னா பென் எப்படி மீள்கிறாள் என்பதே படத்தின் கதை.

இந்த படத்தில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் நடிப்பிற்கு முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள். ஆனால் அவர்களை கதாபாத்திரமாகவே பொருந்தி போக வைத்திருக்கிறார் பி எஸ் வினோத் ராஜ். Kottukkaali movie review!ஒரு காட்சிக்கும் அதைத்தொடர்ந்து வரும் மற்றொரு காட்சிக்கும் உள்ள பரபரப்பு கதையை சுவாரசியமாக நகர்த்தி செல்கிறது. ஆரம்பத்தில் படமானது புதிர் போல் தொடங்கினாலும் நேரம் செல்ல செல்ல ஒரு குடும்பத்தில் நடப்பது இதுதான் என்பதை புரிய வைக்கிறது. படத்தில் ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அனைவரின் நடிப்பும் சிறப்பு. மொத்தத்தில் சொல்ல வந்ததை இயல்பாகவும் அழுத்தமாகவும் கனமான கதை மூலம் சொல்லியிருக்கிறார் பிஎஸ் வினோத்ராஜ். எனவே இந்த படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

MUST READ