Homeசெய்திகள்சினிமாமீண்டும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான கொட்டுக்காளி

மீண்டும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான கொட்டுக்காளி

-

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் கொட்டுக்காளி திரைப்படம் மீண்டும் ஒரு சர்வதேச திரைப்ப விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமன்றி, சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் அடுத்தடுத்து பல படங்களை தயாரித்து வருகிறார். கனா படத்தின் மூலமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இதுவரை 5 படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி.

கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, படங்களின் வரிசையில், ‘கூழாங்கள்’ படத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சென்று சர்வதேச விருதுகளை வாங்கிய பி.எஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். சூரி நாயகனாக நடிக்க, பிரபல மலையாள நாயகி அன்னா பென் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து, 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்நிலையில், கொட்டுக்காளி திரைப்படம் ருமேனியா நாட்டில் நடைபெற உள்ள டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகி உள்ளது. இதை படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையொட்டி, படக்குழுவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ