நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருபவர். அந்த வகையில் இவர் தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் எல்ஐகே திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க நலன் குமாரசாமி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக நடித்திருக்கிறார். மேலும் ராஜ் கிரண், சத்யராஜ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை க்ரித்தி ஷெட்டி வா வாத்தியார் படம் குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கூறியுள்ளார்.
#KrithiShetty Recent
– The shooting of the film #VaaVaathiyaar has been completed.
– The post-production work of this film is currently underway.
– I also dreamed of acting with #Karthi sir.#HIT3
pic.twitter.com/UEmShBujGw— Movie Tamil (@MovieTamil4) April 3, 2025
அதன்படி அவர், “நான் நிறைய டைம் சொல்லி இருக்கிறேன். கார்த்தி சார் என்னுடைய ஃபேவரிட் ஆக்டர். வா வாத்தியார் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. அந்த படத்திற்காக ஆர்வமாக காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.