Homeசெய்திகள்சினிமாகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி.... நாளை வெளியாகும் 'காதலிக்க நேரமில்லை' ட்ரெய்லர்!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி…. நாளை வெளியாகும் ‘காதலிக்க நேரமில்லை’ ட்ரெய்லர்!

-

- Advertisement -

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருக்கிறது.கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி.... நாளை வெளியாகும் 'காதலிக்க நேரமில்லை' ட்ரெய்லர்!

வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. இவரது இயக்கத்தில் தற்போது காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, லால், வினய் ராய், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். காவெமிக் ஆரி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படமானது வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி.... நாளை வெளியாகும் 'காதலிக்க நேரமில்லை' ட்ரெய்லர்!இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. அதே சமயம் இந்த படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோவும் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் நாளை (ஜனவரி 7ஆம் தேதி) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ