தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குபேரா. இந்த படம் தனுஷின் 51 வது படமாகும். இதனை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். மும்பை தாராவியை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு திருப்பதி, மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த படம் 2025 பிப்ரவரி மாதம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வரும் என சமீபகாலமாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில் படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என படக் குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.