தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் கடைசியாக ராயன் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தையும் இட்லி கடை எனும் திரைப்படத்தையும் இயக்குகிறார். இதற்கிடையில் இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அதன்படி தனுஷின் 51வது படமாக உருவாகும் இந்த படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நடிகர் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. நடிகர் தனுஷ் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, ஐதராபாத் மும்பை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது மற்ற நடிகர்களின் போர்ஷன்கள் படமாக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இட்லி கடை படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளை நிறைவு செய்த தனுஷ், குபேரா படப்பிடிப்பில் இணைய இருக்கிறார். எனவே இந்த வாரத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் குபேரா படத்தின் முதல் பாடல் இந்த மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -