நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் குபேரா. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் மும்பை தாராவியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. தனுஷின் 51வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, மும்பை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து சமீபத்தில் படக்கூடிய மே 2ஆம் தேதி புதிய அப்டேட் போன்ற வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தனர். அதன்படி அந்த அப்டேட் படத்தின் டீசராக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது அந்த அப்டேட் நாகார்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக் என்பது தெரியவந்துள்ளது.
After a spectacular response to @dhanushkraja‘s first look, get ready as King is set to conquer the screens!! 🔥@IamNagarjuna’s FIRST LOOK unleashing on May 2nd on @StarSportsTEL ❤️🔥#SekharKammulasKUBERA@iamRashmika @sekharkammula @jimSarbh @Daliptahil @ThisIsDSP @SVCLLP pic.twitter.com/31m4BQHeh7
— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) April 30, 2024
இதனை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் நாகார்ஜுனா , இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாக இருக்கும் தலைவர் 171 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.