குடும்பஸ்தன் படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் மணிகண்டன். அதைத் தொடர்ந்து இவர் குட் நைட், லவ்வர் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றார். அடுத்தது இவரது நடிப்பில் குடும்பஸ்தன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. அறிமுக இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. சினிமாக்காரன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க வைஷாக் இதற்கு இசையமைத்து இருந்தார். நடிகர் மணிகண்டன் வழக்கம் போல் இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். மேலும் ஒரு மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாகவும் காமெடியாகவும் தந்திருந்தார் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி. இவ்வாறு இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.