Homeசெய்திகள்சினிமாவிஜய் தேவரகொண்டாவின் கம்பேக்..... பிளாக்பஸ்டர் லிஸ்டில் இணைந்த குஷி!

விஜய் தேவரகொண்டாவின் கம்பேக்….. பிளாக்பஸ்டர் லிஸ்டில் இணைந்த குஷி!

-

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் குஷி திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் இவர்களுடன் இணைந்து ரோகிணி, லட்சுமி, சரண்யா பொன்வண்ணன், சச்சின் ஹெடேக்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை சிவா நிர்வனா இயக்கியுள்ளார். ஹேசம் அப்துல் வாகப் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா திரைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது. எளிமையான காதல் கதையை மையமாக வைத்து ஃபேமிலி என்டர்டயினர் படமாக வெளியாகி உள்ளது.

மேலும் அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வருகிறது. வெளியான முதல் நாளிலேயே 30.1 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதைத்தொடர்ந்து 2வது நாளில் 51 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் அதிவேகமாக 100 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ