Homeசெய்திகள்சினிமா'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது.'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!1980 முதல் 2000 காலகட்டத்தில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில். இவர் தற்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் லால் சலாம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர் ஹீரோவாக புதிய படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கிய யோகி பாபு தற்போது ஹீரோவாக பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் செந்தில் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் இணைந்து குழந்தைகள் முன்னேற்றக் கழகம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை கார்த்தியின் சகுனி பட இயக்குனர் சங்கர் தயாள் இயக்கி இருந்தார்.'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இப்படத்தை மீனாட்சி அம்மன் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ