தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தொடர்ந்து அஜித், சூர்யா, விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றினார். தனது சிறப்பான நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். அந்த வகையில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுகிறார்.
மேலும் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் தடம் பதித்தார். கடைசியாக நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் நயன்தாரா மண்ணாங்கட்டி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.
இதற்கிடையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா வாடகை தாயின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அத்துடன் இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கி தொடர்ந்து பல வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
🤌🏻❤️ pic.twitter.com/3oTiuCmPGJ
— Nayanthara✨ (@NayantharaU) February 13, 2024
அது மட்டும் இல்லாமல் நடிகை நயன்தாரா தொழிலதிபராகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். காதலர் தினத்தையொட்டி நயன்தாரா வெளியிட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.