லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் அம்மணி, நெருங்கி வா முத்தமிடாதே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக சமுத்திரக்கனி, அபிராமி ஆகியோரின் நடிப்பில் வெளியான ஆர் யூ ஓகே பேபி திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். தான் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதைகளை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும் இவர் யுத்தம் செய் போன்ற பல படங்களில் நடிகையாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ரன்பீர் கபூரின் அனிமல் படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Watched #Animal today, imagination, performances, craft , grandeur, swag and perversion at its best 😊Epic climax scene between father and son 😍Normalising , celebrating extreme violence, blood shed on screen and the likes of @anuragkashyap72 shower praises! Wow!!!
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) January 28, 2024
அந்த பதிவில், “அனிமல் படத்தினை பார்த்தேன். கற்பனை, நடிப்பு, பிரம்மாண்டம், வக்கிரம் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகளில் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் வரும் காட்சிகள் இயல்பாக இருக்கிறது. அதேசமயம் வன்முறை, ரத்தம் சிந்துதல் போன்றவை அனுராக் காஷ்யப் பாராட்டியதை போல் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2023 டிசம்பர் 1ஆம் தேதி ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா, பாபி தியோல் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படத்திற்கு திரை பிரபலங்கள் உட்பட பலரும் எதிர்மறையான விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி அனிமல் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.