லால் சலாம் படத்தின் காட்சி பதிவுகள் மாயம்… படக்குழுவினர் அதிர்ச்சி….
- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரஜினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து லால் சலாம் டப்பிங் பணிகளை ரஜினி நிறைவு செய்துள்ளார் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது படத்தின் சில காட்சிகளின் பதிவுகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், படக்குழுவின்ர அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், லால் சலாம் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போகலாம் என்று தெரிகிறது. விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.