லால் சலாம் திரைப்படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கி இவர் திரையுலகில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இப்படத்தின் மூமம் அனிருத்தும் இசை அமைப்பாளராக தடம் பதித்தார். இத்திரைப்படம் வெற்றி பெறவே அடுத்து, வை ராஜா வை என்ற திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கினார். இப்படத்தில் கௌதம் கார்த்திக் நடித்திருந்தார். இத்திரைப்படம் வரவேற்பை பெற்றது.
இதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் திரைப்படம் லால் சலாம். இதில், விஷ்ணு விஷால், விதார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரஜினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற வேடத்தில் ரஜினி இதில் நடிக்கிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு அண்மையில் சென்னையில் உள்ள கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், லால் சலாம் படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக வைரலாகி வருகின்றன. வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.