Homeசெய்திகள்சினிமாஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள்... லால் சலாம் படக்குழு வாழ்த்து...

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள்… லால் சலாம் படக்குழு வாழ்த்து…

-

- Advertisement -
புத்தாண்டு தினமான இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு, லால் சலாம் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்து வீடியோ பகிர்ந்துள்ளனர்.

தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களுக்கு பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் மொய்தீன் பாய் எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை, உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

அதைத்தொடர்ந்து லால் சலாம் டப்பிங் பணிகளை ரஜினி நிறைவு செய்துள்ளார் என்ற அறிவிப்பும் வெளியானது. அடுத்து, லால் சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், புத்தாண்டு தினமான இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு, லால் சலாம் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்து வீடியோ பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ