தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் நடிகர் சூரி. அந்த படத்தில் இருந்து இவர் அனைவராலும் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன், சூர்யா, விஜய், ரவி மோகன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். தற்போது இவர் தொடர்ந்து பல படங்களை ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை 2 திரைப்படம் வெளியானது. அடுத்தது இவரது நடிப்பில் மாமன் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் ராம் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
இதற்கிடையில் இவர் செல்ஃபி படத்தின் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை நடிக்க போவாதவும், இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி இந்த படத்தின் பூஜையை பிரம்மாண்டமாக நடத்தி திரைத்துறையை கலக்க நடிகர் சூரி திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சூரியின் அடுத்த படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடக்க உள்ள தகவல் அறிந்த ரசிகர்கள், ‘இவரு பெரிய ஹீரோக்களுக்கு டஃப் கொடுப்பார் போல’ என்று தங்களின் கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.