குட் பேட் அக்லி படத்தின் டீசர் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 63வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீப காலமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு தகவல்களையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி இந்த படத்தில் நடிகர் அஜித், தீனா பட லுக்கிலும் நடித்திருக்கிறார். மேலும் தீனா படத்தில் இடம்பெற்ற வத்திக்குச்சி பத்திக்காதுடா எனும் பாடலையும் ரீமேக் செய்துள்ளனர் என்ற அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 14) இந்த படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குட் பேட் அக்லி படத்திலிருந்து எந்தவித அப்டேட்டும் வெளிவரவில்லை. இந்நிலையில் அடுத்த மாதம் (மார்ச்) 6ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.