Homeசெய்திகள்சினிமாகார்த்தியின் 'கைதி 2' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

கார்த்தியின் ‘கைதி 2’ படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

கைதி 2 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.கார்த்தியின் 'கைதி 2' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

கடந்த 2019-ல் கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் தான் லோகேஷ் உருவாக்கி இருக்கும் எல்சியு-வின் முதல் படமாகும். இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தியை வேறொரு பரிமாணத்தில் காட்டி இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே போகிறது. இந்நிலையில்தான் கைதி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் இந்த படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.கார்த்தியின் 'கைதி 2' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

அடுத்தது கைதி திரைப்படத்தில் நடிகர் கார்த்தி 10 வருடங்களாக ஜெயிலில் இருந்ததாகவும் அதன் பிறகு அவர் ரிலீஸ் செய்யப்பட்டு தன்னுடைய மகளுடன் சேர்வதாகவும் காண்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் பாகத்தில் கார்த்தி எதற்காக ஜெயிலுக்கு செல்வார் என்பது போன்ற விஷயங்கள் காட்டப்படவில்லை. எனவே கைதி 2 திரைப்படத்தில் கார்த்தியின் கடந்த கால வாழ்க்கை காட்டப்படும் என ஏற்கனவே தகவல் வெளியானது. கார்த்தியின் 'கைதி 2' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!இந்நிலையில் கைதி 2 படத்தில் ப்ரீக்குவல் மட்டுமல்லாமல் சீக்குவல் கதையும் காட்டப்படும் என்று சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ