பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு இயக்குனராக தனது பயணத்தை தொடங்கினார். அதன்படி கோமாளி திரைப்படத்தை இயக்கியதை தொடர்ந்து லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் பிரதீப் ரங்க நாதனை இந்திய அளவில் பிரபலமாக்கியது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக கமிட் ஆகி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அதன்படி ஏற்கனவே எல்ஐகே, டிராகன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஏறத்தாழ நிறைவடைந்து இரண்டு படங்களுமே அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகி வருகின்றன. இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தி ஈஸ்வரன் என்பவரின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. தற்போது இது குறித்த கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ள புதிய படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. விரைவில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தமிழில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதை தொடர்ந்து இரண்டாவதாக பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தை தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.