Homeசெய்திகள்சினிமாராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அதே சமயம் இவர் பிரம்மாண்ட இயக்குனர் என்று பலராலும் அழைக்கப்படுகிறார். இவரது இயக்கத்தில் கடைசியாக ஆர்ஆர்ஆர் எனும் திரைப்படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து இவர், மகேஷ் பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக SSMB29 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாகவும் பிரித்விராஜ் வில்லனாகவும் நடிக்க இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகி வருகின்றன.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்! அத்துடன் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் 2027 ஆம் ஆண்டிலும் இரண்டாம் பாகம் 2029ஆம் ஆண்டிலும் திரைக்கு கொண்டுவரப்படும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்று வருவதாகவும் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஜனவரி 2) வெளியாக வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ