தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான். அதாவது பஸ்ஸில் கண்டக்டராக விசில் அடித்துக் கொண்டு இருந்த ரஜினிக்காக இன்று கோடான கோடி ரசிகர்கள் விசில் அடிப்பார்கள் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்திய அளவில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலாட்சி செய்து வருகிறார் ரஜினி. அதன்படி இவருடைய ஒவ்வொரு படங்களையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருவார்கள். தற்போது உருவாகி இருக்கும் கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக இருந்து வருவதால் அந்த படத்தை கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 4) இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. அதன்படி அந்த அறிவிப்பு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதாவது இந்த படத்தினை 2025 ஆகஸ்ட் அல்லது அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் எந்த தேதியில் கூலி திரைப்படம் வெளியாகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயம் விரைவில் அறிவிப்பு வெளியாகும் நேரமும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.