Homeசெய்திகள்சினிமா'ரெட்ரோ' படத்தின் இசை வெளியீட்டு விழா..... எப்போ எங்கன்னு தெரியுமா?

‘ரெட்ரோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா….. எப்போ எங்கன்னு தெரியுமா?

-

- Advertisement -

ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.'ரெட்ரோ' படத்தின் இசை வெளியீட்டு விழா..... எப்போ எங்கன்னு தெரியுமா?

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் ரெட்ரோ. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை என்பதால் சூர்யாவின் அடுத்த படமான ரெட்ரோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படம் சூர்யாவின் 44 வது படமாகும். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.'ரெட்ரோ' படத்தின் இசை வெளியீட்டு விழா..... எப்போ எங்கன்னு தெரியுமா?இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், சூர்யா – ஜோதிகாவின் 2D நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகின்ற மே 1ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அதிலும் சந்தோஷ் நாராயணன் குரலில் வெளியான கனிமா பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியானது.'ரெட்ரோ' படத்தின் இசை வெளியீட்டு விழா..... எப்போ எங்கன்னு தெரியுமா? தற்போது கிடைத்த தகவலின் படி வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சென்னை, நேரு அரங்கத்தில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா என்ன பேசுவார்? என்பதை தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ