Homeசெய்திகள்சினிமாமிகவும் எதிர்பார்க்கப்படும் 'சர்தார் 2'.... லேட்டஸ்ட் அப்டேட்!

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘சர்தார் 2’…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

சர்தார் 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.மிகவும் எதிர்பார்க்கப்படும் 'சர்தார் 2'.... லேட்டஸ்ட் அப்டேட்!

கடந்த 2022 ஆம் ஆண்டு பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சர்தார் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஸ்பை ஆக்ஷன் திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது கார்த்தி, பி.எஸ். மித்ரன் கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். முதல் பாகத்தைப் போலவே இந்த படத்திலும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் கார்த்தி. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாம்.சி.எஸ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் 'சர்தார் 2'.... லேட்டஸ்ட் அப்டேட்!அதன்படி இப்படப்பாடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை வரை மைசூரில் நடைபெற்றதாகவும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் பாடல் காட்சி உட்பட ஒரு சில காட்சிகள் பேங்காக் மற்றும் சென்னையில் படமாக்கப்பட இருக்கிறது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என பல தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

MUST READ