வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா தற்போது ரெட்ரோ திரைப்படத்தை முடித்திருக்கும் நிலையில் அடுத்தது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். காதல் கதையில் உருவாகும் இந்த படத்தை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருந்தார். கலைப்புலி எஸ். தாணுவின் தயாரிப்பிலும் ஜி.வி. பிரகாஷின் இசையிலும் உருவாகும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதன்படி நடிகர் சூர்யா மாடுபிடி வீரர்களுடன் பல பயிற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும் இந்த படம் இதுவரை தொடங்கப்படாமல் இருக்கிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் தாணு, வாடிவாசல் திரைப்படம் 2025 ஜூலை மாதத்தில் தொடங்கும் என அப்டேட் கொடுத்திருந்தார். ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி தொடங்கும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது.இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் தரப்பிலிருந்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி மீண்டும் மீண்டும் இப்படம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. இருப்பினும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் இருப்பதால் இன்றுவரையிலும் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆதலால் ஒரு வழியாக ஆகஸ்ட் மாதத்திலாவது இந்த படத்தை தொடங்கி விடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.