அட்லீயின் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர் விஜயின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி மீண்டும் மீண்டும் வெற்றி கண்டார். அடுத்தது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து ஜவான் படத்தில் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அதாவது கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற இயக்குனர்களில் முக்கியமான இடத்தைப் பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். எனவே இவருடைய அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில், அட்லீயின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க போவதாகவும் இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் ஹாலிவுட் ரேஞ்சில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் எனவும் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் இந்த படத்தில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இவ்வாறு இந்த படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. அதன்படி அட்லீ – அல்லு அர்ஜுனின் அடுத்த படம் ரூ. 600 கோடியில் உருவாகிறது என்றும் இதில் அல்லு அர்ஜுன், அட்லீ ஆகிய இருவருக்கும் சரிசமமாக ரூ. 110 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் மற்றொரு தரப்பில் இந்த படத்தில் அல்லு அர்ஜுன், அட்லீ ஆகிய இருவருக்கும் சம்பளம் கிடையாது.
இந்த படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் அல்லு அர்ஜுனுக்கு 30 சதவீதமும், அட்லீக்கு 15 சதவீதமும் பங்கு கொடுப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் பல தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 600 கோடி இல்லையாம். அதைவிட அதிகமாக ரூ. 800 கோடியில் இப்படம் தயாராக இருக்கிறது என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இருப்பினும் இது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.