Homeசெய்திகள்சினிமாஜெயிலர் ரிலீஸான அதே தேதியில் வெளியாகும் 'கூலி'?

ஜெயிலர் ரிலீஸான அதே தேதியில் வெளியாகும் ‘கூலி’?

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. ஜெயிலர் ரிலீஸான அதே தேதியில் வெளியாகும் 'கூலி'?செம மாஸாகவும் மிரட்டலாகவும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சுமார் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இமாலய வெற்றி பெற்றது. அடுத்தது ஜெயிலர் 2 திரைப்படம் விரைவில் உருவாக இருக்கிறது. இதற்கிடையில் ரஜினி நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வெளியானது. அதே சமயம் கூலி திரைப்படமும் உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத்தின் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.ஜெயிலர் ரிலீஸான அதே தேதியில் வெளியாகும் 'கூலி'? இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாகிர், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை ஆகிய பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2025 மார்ச் மாதத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படம் கோடையில் வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டது. பின்னர் இப்படம் 2025 தீபாவளிக்கு வெளியாகும் எனவும் தகவல் கசிந்தது. ஜெயிலர் ரிலீஸான அதே தேதியில் வெளியாகும் 'கூலி'?ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தை 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. ஜெயிலர் திரைப்படம் வெளியான அதே தேதியில் கூலி திரைப்படமும் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை தந்துள்ளது. எனவே விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ