Homeசெய்திகள்சினிமாஅஜித், மகிழ் திருமேனி கூட்டணியின் 'விடாமுயற்சி' ........காத்திருக்கும் சிறப்பான சம்பவம்!

அஜித், மகிழ் திருமேனி கூட்டணியின் ‘விடாமுயற்சி’ ……..காத்திருக்கும் சிறப்பான சம்பவம்!

-

அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு அஜித் தனது 62 ஆவது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இந்தப் படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.
விடாமுயற்சி என்ற தலைப்பில் லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. மேலும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகவுள்ள இந்த படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் அஜித் மிரட்டலான தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் EFFORTS NEVER FAIL என்ற குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் லைக்கா நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை காரணமாக இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. புனேவில் தொடங்கும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் முக்கிய தகவலாக, அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று புதியதொரு தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் ஏற்கனவே ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். குறிப்பாக வாலி, வில்லன் சிட்டிசன், வரலாறு உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில் விடாமுயற்சி திரைப்படமும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ