நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வந்தது. அஜர்பைஜானில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சில காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதேசமயம் நடிகர் அஜித் தனது அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளார். எனவே விடாமுயற்சி திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பானது ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. தற்போது கிடைத்த தகவலின் படி விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடையும் என்று தெரியவந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் பிரம்மாண்ட கிளைமாக்ஸ் காட்சிகளும் ஆக்சன் காட்சிகளும் மட்டுமே மீதம் இருக்கிறதாம்.
இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஆகியோர் ஏற்கனவே அஜர்பைஜான் சென்றுவிட்டார்கள் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பட குழுவினர்கள் இந்த படத்தை தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -