Homeசெய்திகள்சினிமாசித்தார்த் நடிக்கும் 'டக்கர்' படத்தின் முக்கிய அப்டேட்!

சித்தார்த் நடிக்கும் ‘டக்கர்’ படத்தின் முக்கிய அப்டேட்!

-

நடிகர் சித்தார்த், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் பல படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது இவர் ‘டக்கர்’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு, திவ்யன்ஷா கௌஷிக், முனீஸ்காந்த், விக்னேஷ்காந்த், அபிமன்யூ சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘கப்பல்’ பட இயக்குனரான கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கி வருகிறார்.

இப்படம் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் நிவாஸ் கே பிரசன்னாவின் இசையிலும் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறைவடைந்திருந்தாலும், தயாரிப்பு பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த படம் வருகின்ற ஜூன் 9 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ