Homeசெய்திகள்சினிமாகே ஜி எஃப் யாஷின் 19 வது படத்தை இயக்கும் மலையாள பெண் இயக்குனர்!

கே ஜி எஃப் யாஷின் 19 வது படத்தை இயக்கும் மலையாள பெண் இயக்குனர்!

-

கே ஜி எஃப், கே ஜி எஃப் சாப்டர் 2 ஆகிய படங்களின் மூலம் அதல பாதாளத்தில் இருந்த கன்னட சினிமாவை இந்தியாவை திரும்பிப் பார்க்கும்படி செய்தவர் தான் நடிகர் யாஷ். இப்படத்தில் இவரது ராக்கி பாய் கதாபாத்திரம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒரு மாஸ் கேரக்டராக அமைந்தது. இப்படங்களைத் தொடர்ந்து யாசின் அடுத்த படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில்தான் யாசின் 19 ஆவது படத்தை இயக்கப் போவது மலையாள நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் என்பது உறுதியாகியுள்ளது. கீது மோகன் தாஸ் தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், மாதவன் நடிப்பில் வெளிவந்த “நள தமயந்தி” படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.யாஷ் ,கே ஜி எஃப் படங்களுக்கு பின்னர் ராமாயணம் கதையில்தான் நடிப்பார் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. யாஷ்-கீது மோகன் தாஸ் கூட்டணியில் உருவாகின்ற இந்த புதிய படத்தின் படப்பிடிப்புகள்  2023 டிசம்பரில் தொடங்க உள்ளது.

MUST READ