குட் பேட் அக்லி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படம் அஜித்தின் 63 வது படமாகும். இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பிரசன்னா, சுனில், கார்த்திகேயா தேவ் மற்றும் பலர் நடிகருக்கின்றனர். கேங்ஸ்டர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
#GoodBadUgly Second Single announcement with promo today at 5.50 PM❤️🙏🏻
— Adhik Ravichandran (@Adhikravi) March 29, 2025
மேலும் இந்த படத்தில் இருந்து டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதேபோல் OG சம்பவம் பாடலும் இணையத்தை கலக்கியது. இந்நிலையில் அடுத்ததாக இப்படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது இன்று (மார்ச் 29) மாலை 5.50 மணியளவில் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு ப்ரோமோவுடன் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த பாடலானது ஜெயில் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தது இந்த படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.