தமிழில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த தனுஷ் தற்போது தமிழ் திரையை தாண்டி பிற மொழிப்படங்களிலும் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என ரவுண்டு கட்டி பிசியாக நடித்து வருபவர் தனுஷ். இந்தியில், ராஞ்சனா மற்றும் ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். இத்திரைப்படம் ஹிட் அடித்தது. தற்போது இயக்குநர் ஆனந்த் எல்.ராயுடன் இணைந்து மூன்றாவது படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே, தற்போது அவர் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார். படத்தில் தனுஷூடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். மேலும், ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி நடித்திருக்கிறார். இது தனுஷின் 50-வது படமாகும். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
Latest video of #Dhanush from Dubai…His look👌🤩 pic.twitter.com/WMTegyqnYi
— AmuthaBharathi (@CinemaWithAB) June 15, 2024