Homeசெய்திகள்சினிமா'போஸ்டர் அடி அண்ணன் ரெடி'..... 2000 டேன்சர்களுக்கு மத்தியில் மாஸ் காட்டிய தளபதி விஜய்!

‘போஸ்டர் அடி அண்ணன் ரெடி’….. 2000 டேன்சர்களுக்கு மத்தியில் மாஸ் காட்டிய தளபதி விஜய்!

-

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் முதல் சிங்கள் வெளியாகி உள்ளது.

மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா, சஞ்சய், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் உருவாகி வரும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் விஜயின் பிறந்த நாளான இன்று லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் ‘நான் ரெடி’ என்ற முதல் சிங்கிள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்பாடலை விஷ்ணு எடாவன் எழுதியுள்ள நிலையில் விஜய் மற்றும் அனிருத், அசல் கோளாறு இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலில் 2000 டான்ஸர்கள் நடனமாடியுள்ளனர்.
இதற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இந்த பாடலில் ‘நான் ரெடி தான் வரவா அண்ணன் நான் இறங்கி வரவா’ போன்ற வரிகள் விஜயின் அரசியல் வருகையை குறிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மேலும் இந்த பாடலின் பெரும்பாலான வரிகளில் அரசியல் சம்பந்தமான கருத்துக்கள் அடங்கியுள்ளது.
ஏற்கனவே விஜய் ரசிகர்கள் பலரும் ‘ ‘நாளைய முதலமைச்சர்’

“நாங்கள் வணங்கும் தலைவா நாளைய தமிழகத்தின் முதல்வா ” போன்ற வசனங்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பாடலில் இடம்பெற்றுள்ள ‘போஸ்டர் அடி அண்ணன் ரெடி’ போன்ற வரிகள் விஜய்யின் எதிர்கால அரசியல் வரவை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த பாடலில் கத்தி, கில்லி உள்ளிட்ட படங்களை தொடர்புபடுத்தும் வரிகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும் இந்தப் பாடல் வெளியான 30 நிமிடங்களுக்குள் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது மட்டுமல்லாமல், 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும் அள்ளியுள்ளது. அது மட்டும் இல்லாமல் வெளிவந்த சில மணி நேரங்களுக்குள் வேற லெவல் ஹிட் கொடுத்த இந்த பாடலை ரசிகர்கள்
விஜயின் பிறந்தநாள் ட்ரீட்டாக கொண்டாடி வருகின்றனர்.

MUST READ