Homeசெய்திகள்சினிமாலியோ ஷூட்டிங்கிற்கு ஃபுல் ஸ்டாப்..... லோகேஷ் கனகராஜின் ஸ்வீட் ட்வீட்!

லியோ ஷூட்டிங்கிற்கு ஃபுல் ஸ்டாப்….. லோகேஷ் கனகராஜின் ஸ்வீட் ட்வீட்!

-

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ‘லியோ‘ திரைப்படம் உருவாகி வருகிறது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் இதற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இப்படத்தில் விஜயுடன் சஞ்சய்தத் திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மேலும் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், நரேன், அர்ஜுன் தாஸ் ஜார்ஜ் மரியான், பகத் பாசில், மடோனா செபாஸ்டியன், வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளதாகவும். கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் இப்படம் வெளிவர இருப்பதால் ரசிகர்களிடம் ஆரம்பத்தில் இருந்தே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. எனவே அனைத்து சினிமா ரசிகர்களும் படத்தில் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வரும் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் அன்று பெரிய அப்டேட் வரும் என்று எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. இந்த படத்தின் ‘நான் ரெடி’ எனும் முதல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

விஜய், இரண்டு நாட்களுக்கு முன்பாக லியோ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது லியோ படம் முழுவதும் நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “6 மாதங்களில் 125 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்திற்காக ஆத்மார்த்தமாக உழைத்த ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்களுக்கும் எனது நன்றி. இந்த பயணம் என் மனதிற்கும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது.
நான் உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்!” என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

MUST READ